திருவாசகம் – பூ ஏறு கோனும்..நானார்
2. நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.

பதப்பொருள்:
நான் ஆர் – நான் என்ன தன்மையுடையவன்?
என் உள்ளமார் ஞானங்கள் ஆர் – என் உள்ளத்தில் நிறைந்த ஞான அறிவு (Wisdom’s lessons) என்ன?
என்னை யார் அறிவார் – என்னை யார் அறிந்து கொள்வார் ?
மதி மயங்கி – பேரருள் காரணமாக மனமிரங்கி
வானோர் பிரான் – தேவர்களின் பெருமான் (சிவன்)
என்னை ஆண்டிலனேல் – என்னை ஆட்கொள்ளாவிடில்!!!
ஊன் ஆர் உடைதலையில் – மாமிசம் பொருந்திய உடைந்த தலை ஓட்டில், உண்பலி தேர் -(உண்பலித்து + ஏர்) உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்கின்ற, அம்பலவன் – அம்பலவாணனது
தேன் ஆர் கமலமே – தேன் ஊறிய தாமரை போன்ற திருவடியின்கண்ணே
சென்று ஊதாய் – போய் ஊதுவாயாக
கோத்தும்பீ – அரச வண்டே!

தெளிவுரை: நான் என்ன தன்மையுடையவன்?, என் உள்ளத்தில் நிறைந்த ஞான அறிவு என்ன? என்னை யார் அறிந்து கொள்வார் ? பேரருள் காரணமாக மனமிரங்கி, தேவர்களின் பெருமான் (சிவன்), என்னை ஆட்கொள்ளாவிடில்!!!மாமிசம் பொருந்திய உடைந்த தலை ஓட்டில், உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்கின்ற அம்பலவாணனது தேன் நிறைந்த தாமரை போன்ற திருவடியின்கண்ணே போய் ஊதுவாயாக!! அரச வண்டே!

விளக்கவுரை: ‘இறைவன் ஆட்கொண்டமையால் தான் தம்மை தாமே அறிந்து கொள்ள முடிந்தது’ என்றும் ‘தான் அதனால் பெற்ற ஞானமும் வெளிப்பட்டது’ என்றும் கூறுகிறார் மாணிக்கவாசகர். கடவுள், பேரருள் காரணமாக மனமிரங்கி தன்னை ஆட்கொண்டார். அதன் மூலம் தான் அடைந்த ஞானம் வெளிப்பட்டது என்றும் மாணிக்கவாசகர் கூறுவதால் அவரின் வினயமும் இங்கு வெளிப்படுகிறது. ‘மதி மயங்கி வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்’ என்று படித்தால் பொருள் சால சிறப்பாக அமையும்!!

தேன் ஆர் கமலமே – தேன் ஊறிய தாமரை போன்ற திருவடியின்கண்ணே என்பதன் மூலம் அவர் திருவடி அவ்வளவு இனிமையாக இருக்கும் என்கிறார். தேனார் கமலமே- பண்பு ஆகுபெயர்.

ஆகுபெயர்:- ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அதனொடு தொடர்புடைய பொருளைக் குறிப்பது ஆகுபெயர் ஆகும். இந்த ஆகுபெயர் 19 வகைப்படும். பெரும்பாலும் வழக்கில் பயன்படுத்தப்படுபவை பொருளாகுபெயர் (thing) , இடவாகுபெயர் (place), பண்பாகுபெயர் (quality) , உவமையாகுபெயர் (comparison) , தானியாகுபெயர் (dont remember!!!)

eg:
தாமரை சேவடி – தாமரை போன்ற மென்மையான சேவடி – lotus like softness – பண்பு ஆகுபெயர்
வெள்ளை அடித்தான் – வெண்மையான சுண்ணம் குறிக்கிறது – white denoting sunnaambu – பொருள் ஆகுபெயர்
பாவை வந்தாள் – சிலைபோன்ற பெண்ணைக் குறிக்கிறது – art like beautiful girl – உவமை ஆகுபெயர்

Thanks to http://tamilkkalvi.blogspot.co.uk